| ADDED : பிப் 24, 2024 12:44 AM
காரமடை அரங்கநாதர் கோவில், தேர்த்திருவிழா பாதுகாப்பு பணியில், 450 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 25ம் தேதி தண்ணீர் மற்றும் தீப்பந்த சேவை நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். விழாவின்போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும், கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையில், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என, 450 க்கும் மேற்பட்டவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் போலீசார் இருப்பர். விழா கூட்டத்தில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், யாரேனும் நடமாடினால், உடனடியாக காரமடை போலீஸ் ஸ்டேஷனில், தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.