உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை குடியரசு தினவிழா; போலீசார் தீவிர கண்காணிப்பு

நாளை குடியரசு தினவிழா; போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. கோவை வ.உ.சி., மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.குடியரசு தினவிழாவை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில், 1,500, மாவட்டத்தில், 1,000 என, 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோவை விமான நிலையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கோவை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று மோப்பநாய் உதவியுடன், ரயிலில் வரும் பார்சல்கள், பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயிலில் உள்ள சோதனை கருவிகள் வாயிலாக, பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. இதேபோல், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை