மேலும் செய்திகள்
கோவையின் மறைந்த நீர்த்தாய் தெப்பக்குளம் மைதான வரலாறு
2 minutes ago
மாமன்ற பேச்சின் வீடியோ கேட்கின்றனர் கவுன்சிலர்கள்
5 minutes ago
அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளியில் விளையாட்டு விழா
6 minutes ago
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு கணக்கெடுப்பு பணிகள், முடிவுக்கு வருகின்றன. படிவங்களை திரும்ப வழங்காதவர்கள், நாளை மாலை 5 மணிக்குள் வழங்கலாம். கோவையில் கடந்த நவ.,4 முதல், வாக்காளர் பட்டியலில் சிறப்பு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. நாளையுடன் இப்பணி நிறைவடைகிறது. கடந்தமுறை வெளியான வாக்காளர் பட்டியலில், கோவை மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளிலும் சேர்த்து, 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில், 1,13,592 பேர் காலமாகியுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லை என்று 76,096 பேர், முகவரி மாறி சென்றவர்கள், 2,91,928 பேர், இரு இடங்களில் ஓட்டுரிமை பெற்றவர்கள், 20,245 பேர், பல காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டவர்கள், 395 பேர் என மொத்தம் 5,02,256 பேர், தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, 15.58 சதவீதம் பேர். காலமானவர்கள், வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை இடம் பெற்றவர்கள் தவிர, மற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் திரும்ப இடம் பெற வேண்டுமானால், தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், மீண்டும் வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கலாம். கோவை மாவட்டத்தில் தற்போது உள்ள, 32,25,198 மொத்த வாக்காளர்களில், பல காரணங்களால், 5,02,256 நீக்கம் செய்யும் பட்சத்தில், மீதமுள்ள 27,22,942 பேர் மட்டுமே மொத்த வாக்காளர்களாக இருப்பர். வரும் 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அதன் பின் வரும் ஜனவரி 15 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம், நீக்கலாம்; திருத்தங்களை மேற்கொள்ளலாம். மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் 5,02,256 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கணக்கில் இரண்டு நாட்களில் சிறுமாற்றம் ஏற்படலாம்' என்றனர்.
2 minutes ago
5 minutes ago
6 minutes ago