உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

வால்பாறையில் கடுங்குளிர்: சுற்றுலா பயணியர் தவிப்பு

வால்பாறை;வால்பாறையில் நிலவும் கடுங்குளிரால், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையில், கடந்த 10 நாட்களாக இடையிடையே கனமழை பெய்கிறது. பருவமழைக்கு பின் பெய்த கனமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வால்பாறையில் காலை, மாலை நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டத்தால், கடுங்குளிர் நிலவுகிறது.இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ள பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை