| ADDED : ஜன 18, 2024 01:08 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு கவியருவியில், கடந்த மூன்று நாட்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தால், இங்கு, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிந்தனர்.குறிப்பாக, நேற்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் இப்பகுதிகளுக்கு வந்தனர். பகலில் கடும் வெயில் நிலவியதால், அதிகப்படியான சுற்றுலா பயணியர் கவியருவியில் குளிக்க ஆர்வம் காட்டினர்.வனத்துறையினர் கூறியதாவது:பகலில் வெயில் அதிகம் இருந்ததால், பூங்காவை சுற்றிப் பார்த்த பலரும், கவியருவிக்கு சென்று குளிக்க ஆர்வம் காட்டினர். அதேநேரம், சுற்றுலா பயணியர் விதிமீறலை தடுக்க வேட்டைத் தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.கடந்த மூன்று தினங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் கவியருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.