உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய 2ம் நிலை போலீசாருக்கு பயிற்சி துவக்கம்

புதிய 2ம் நிலை போலீசாருக்கு பயிற்சி துவக்கம்

கோவை:புதிய, 2ம் நிலை போலீசாருக்கு பயிற்சி துவக்கப்பட்டது.கோவை பாலசுந்தரம் ரோட்டில் மாநகர ஆயுதப்படை போலீஸ் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.இங்கு புதிதாக தேர்வு செய்யப்படும், 2ம் நிலை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிதாக, 60 பெண்கள் உள்பட, 300 பேர் 2ம் நிலை போலீசாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி துவங்கியது. பயிற்சியை, மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் துவக்கி வைத்தார். பயிற்சியின் போது துப்பாக்கியை கையாளுவது எப்படி, ஆயுதப்படை பிரிவு என்றால் என்ன, அங்கு வழங்கப்படும் பணிகள் என்ன, என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங், பயிற்சியாளர்களான எஸ்.ஐ.,க் கள் சேவியர், சுபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை