உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக கிரிக்கெட் அணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் பயிற்சி

தமிழக கிரிக்கெட் அணிக்கு ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் பயிற்சி

கோவை;எஸ்.ஜி.எப்.ஐ.,யின் தேசிய அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அப்போட்டிகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர் - வீராங்கனைகள் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளித்து போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, ஜன.,9ம் தேதி முதல் 28ம் தேதி வரை பாட்னாவில் நடக்கிறது. இதில், பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. மேலும், பள்ளி சார்பில் புதிதாக 'கிரிக்கெட் நெட்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, கடந்த 5ம் தேதி நடந்தது. கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் பயிற்சி மைதானத்தை திறந்து வைத்தார். கிரிக்கெட் பயிற்சியாளர் சுரேஷ், முன்னாள் தமிழக அணி கிரிக்கெட் வீரர் கண்ணன், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் உடனிருந்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ