உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உபரி ஆசிரியர் பணியிடம் வேறு பாடத்துக்கு மாற்றம்

உபரி ஆசிரியர் பணியிடம் வேறு பாடத்துக்கு மாற்றம்

கோவை;மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேறு பாடங்களுக்கு மாற்றி தரப்பட்டுள்ளது.பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாடத்துக்கும், ஆர்.எஸ். புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்(மேற்கு) வணிகவியல் பாடத்துக்கும் ஆசிரியர்கள் நிரப்பப்படாது இருந்ததால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் இருந்துவந்தது.இதையடுத்து, உபரியாக மற்றும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்றித்தருமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.இந்நிலையில், உபரியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை(உயிரியல்) வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை