| ADDED : பிப் 09, 2024 11:33 PM
- நமது நிருபர் -கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி கோவிலின் மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, சில ஆண்டுகளாக, மார்ச் - மே வரை மட்டுமே அனுமதிக்கின்றனர்.நடப்பாண்டு, மார்ச் 1ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள், பிப்., 15 முதல் அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மலைகளில் கடைகள் வைக்க பழங்குடியினர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் கடைகள் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கடை நடத்துவோரிடம் சிலர் பணம் வசூலிப்பதாகவும் வரும் புகாரை தடுக்கவும் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறுகையில், ''மார்ச் 1ம் தேதி முதல், பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பழங்குடியினர் வாழ்வாதாரத்துக்கே கடைகள் ஒதுக்கப்படுகின்றன. ஆய்வு செய்து முறைகேடுகள் தடுக்கப்படும்,'' என்றார்.