உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய சட்டத்தை எதிர்த்து லாரிகள் வேலை நிறுத்தம்: ஆன்லைனில் திருடு போன ரூ. 31 கோடி முடக்கம்

புதிய சட்டத்தை எதிர்த்து லாரிகள் வேலை நிறுத்தம்: ஆன்லைனில் திருடு போன ரூ. 31 கோடி முடக்கம்

அன்னுார்:புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து அன்னுார் வட்டாரத்தில், 50 சதவீத லாரிகள் நேற்று இயங்கவில்லை.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் வாகனங்களுக்கு, பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஏழு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னுார் வட்டார அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று துவக்கினர். இதையடுத்து அன்னுார் வட்டாரத்தில் 50 சதவீத லாரிகள் நேற்று இயங்கவில்லை. வாகன ஓட்டுனர்கள் மோட்டார் வாகன புதிய சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, துண்டு பிரசுரங்களை மினி லாரி, சரக்கு ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களிடமும் வாகன பணிமனைகளிலும் விநியோகித்தனர்.'இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை, மாநில சங்கத்தின் அறிவுரைப்படி வேலை நிறுத்தம் தொடரும்,' என அன்னுார் வட்டார அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை