உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நாளை துவங்குகிறது யூனியன் வங்கியின் லோன் மேளா

கோவையில் நாளை துவங்குகிறது யூனியன் வங்கியின் லோன் மேளா

கோவை;யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வீடு மற்றும் கார் கடன் மேளா பிப்., 24, 25 ஆகிய தேதிகளில், கோவை - திருச்சி ரோடு வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. கடன் மேளா, வீட்டுக்கடன், கார் கடன், தொழில் கடன்களை சுலபமாக பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முன்னணி பில்டர்களின் அரங்கங்கள், 100க்கும் மேற்பட்ட புராஜெக்ட்கள், 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், பண்ணை நிலங்கள், வீடுகள் விபரம், புதுரக கார்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில், உடனடி கடன் அனுமதி பெற்று தர ஏற்பாடு செய்யப்படுகிறது. மேளா மற்றும் கண்காட்சியின் ஒரு பகுதியாக, பிப்., 25 மாலை 4 மணி முதல் சிறுவர்களுக்கு ஓவிய போட்டி, மேஜிக் ஷோ உள்ளிட்டவை நடக்கவுள்ளன. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை