உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை தேவை கலெக்டரிடம் சங்கத்தினர் மனு

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை தேவை கலெக்டரிடம் சங்கத்தினர் மனு

கோவை:கோவை மாவட்ட தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு, கலெக்டர் வழியாக அனுப்புவதற்கு கோரிக்கை மனுவை, நேற்று கொடுத்தனர்.அதில், மாவட்ட பொறுப்பாளர் சம்பத் கூறியிருப்பதாவது:சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம், 2015ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால், முறையாக அமல்படுத்தப்படவில்லை. மாவட்டம் முழுவதும் முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெரு வியாபாரிகளுக்கு வியாபார சான்று, ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.ஐந்தாண்டுக்கு ஒரு முறை வணிகக்குழு தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.வணிகக்குழு கூட்டத்தை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்பாக வைக்க வசதி செய்து தர வேண்டும். வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை