உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு  பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு  பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி;'சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வக்கீல்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், வக்கீல்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள், கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை காண, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.இந்நிலையில், கேரளா மாநில அரசுக்கும், தேவஸ்தானத்துக்கும் உள்ள பிரச்னை காரணமாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. குடிநீர், உணவு வசதி இல்லாத சூழல் உள்ளது. பக்தர்களை கண்காணிக்கவும், ஒழுங்குப்படுத்தவும் போலீசார் யாரையும் நியமிக்கவில்லை.அதே போல, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் இடத்திலும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதனால், பக்தர்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.இது குறித்து, மத்திய, மாநில அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ