உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்

 அறிவிப்பை பொருட்படுத்தாமல் நிறுத்தப்படும் வாகனங்கள்

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோதவாடி பிரிவு அருகே ரோட்டோரம் விதிமுறை மீறி வாகனம் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு கோதவாடி பிரிவு அருகே ரோட்டோரம் அதிகளவில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. மேலும், கோதவாடி ரோட்டில் தனியார் நிறுவனங்கள் இருப்பதால், அதிகளவில் கனரக வாகன போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை தடை விதித்து, 'நோ பார்க்கிங்' அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை கவனிக்காமலும், விதிமுறை மீறியும் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில், அதிகளவில் விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே, இப்பகுதியில் 'பார்க்கிங்' செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வாகனங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த முடியும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி