உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விநாயகர் கோவில் இடிப்பு: கிராம மக்கள் அதிர்ச்சி

 விநாயகர் கோவில் இடிப்பு: கிராம மக்கள் அதிர்ச்சி

சூலுார்: ஊத்துப்பாளையத்தில் பழமையான கோவில் இடிக்கப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசூர் அடுத்த ஊத்துப்பாளையத்தில் பழமையான வல்லப கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமை மாறாமல், திருப்பணிகள் செய்ய கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில்,கடந்த, 21 ம்தேதி இரவு, தனி நபர் ஒருவர் தூண்டுதலால் கோவில் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கோவில் இடிக்கப்பட்டிருப்பது கண்டு, அக்கிராம மக்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் முருகேசன், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் அங்கு திரண்டு, கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற போலீசார், கோவிலை இடித்த நபர்களிடம் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை