உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேக், சாக்லேட் தயாரிப்பில் விதிமுறை மீறல்; 60 பேக்கரி, நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கேக், சாக்லேட் தயாரிப்பில் விதிமுறை மீறல்; 60 பேக்கரி, நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கோவை; புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி, உணவு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாத 60 பேக்கரி, தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் கடைகள், உணவு தயாரிப்பு இடங்கள், ஹோட்டல்கள், தெருவோர கடைகள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு கேக், சாக்லேட் பயன்பாடு அதிகளவில் இருக்கும் என்பதால், இம்மாதம் வழக்கமான ஆய்வுகளுடன் பேக்கரிகள், சாக்லேட் தயாரிப்பு இடங்களில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''424 இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, 183 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். விதிமுறை மீறல்கள் இருந்த 60 பேக்கரி, உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கும் பொழுது, பேக்கிங் தேதி, பயன்பாட்டு தேதியை சரிபார்க்கவேண்டியது அவசியம். ஏதேனும் புகார்கள் இருப்பின் தயக்கமின்றி புகார் அளிக்க முன்வரவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை