உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

 மழைப்பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் சரிவு

வால்பாறை: மழைப்பொழிவு குறைந்ததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 10 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து, கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனிடையே, பனிப்பொழிவு அதிகரித்து வருவதால், எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகள் கருகும் அபாயம் உள்ளது. மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 124.87 அடியாக இருந்தது. இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், 115.60 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 69.01 அடியாகவும் இருந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை