உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரைவில் வாழைத்தார் ஏல மையம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரைவில் வாழைத்தார் ஏல மையம்

மேட்டுப்பாளையம்: 'சிக்கதாசம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாழைத்தார் ஏல மையம், விரைவில் துவங்கப்பட உள்ளது' என, கண்காணிப்பாளர் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதனக்கிடங்கு, 10 கடைகள், விவசாய விளைப்பொருட்களை இருப்பு வைக்கும் கிடங்கு, சிமெண்ட் தளங்கள் ஆகியவை உள்ளன. இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வாழைத்தார் ஏல மையம் துவங்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில், வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் நலன் கருதி, சிக்கதாசம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாழைத்தார் ஏழை மையம், விரைவில் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்களுக்கு, எவ்வித கமிஷன் கட்டணம் வசூல் செய்வதில்லை. மேலும் விவசாய விளைப்பொருட்கள் இருப்பு வைக்க, குளிர்பதன கிடங்கு உள்ளது. இங்கு வைக்கப்படும் விவசாய விளைப்பொருட்களுக்கு, பொருளீட்டுக்கடன் வழங்கப்படும். எனவே, இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ