உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஊட்டியில நாங்க சவாரி ஏற்றக்கூடாதாம் கோவையில அவங்க மட்டும் ஏற்றலாமா? கோவை கால் டாக்சி ஓட்டுனர்கள் கேள்வி

 ஊட்டியில நாங்க சவாரி ஏற்றக்கூடாதாம் கோவையில அவங்க மட்டும் ஏற்றலாமா? கோவை கால் டாக்சி ஓட்டுனர்கள் கேள்வி

கோவை: சூலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் தங்கவேல்,52, இவர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊட்டிக்கு பயணிகளை, தனது கால் டாக்சியில் வாடகை அடிப்படையில் அழைத்து சென்றார். பின்னர் பயணிகளை ஊட்டியில் இறக்கிவிட்டு அங்கிருந்து சிலரை, கோவைக்கு அழைத்து வர தனது டாக்சியில் ஏற்றினார். அங்குள்ள வாடகை கார் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவையிலிருந்து ஊ ட்டிக்கு பயணிகளை அழைத்து வரும், டாக்சி டிரைவர்கள் ஊட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து, கோவைக்கு மீண்டும் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என, வாக்குவாதம் செய்தனர். ஆத்திரமடைந்த சில டிரைவர்கள் சேர்ந்து, தங்கவேலை சரமாரியாக தாக்கினர். இச்சம்பவத்தை கண்டித்து, கோவை மாவட்ட கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. டிரைவர்கள் கூறியதாவது:- கோவையிலிருந்து ஊட்டிக்கு பயணிகளை ஏற்றி செல்லும் கால் டாக்சி டிரைவர்கள், மீண்டும் அங்கிருந்து கோவைக்கு பயணிகளை வாடகைக்கு அழைத்து வர, ஊட்டி டாக்சி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில், ஊட்டியிலிருந்து கோவை விமானநிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகளை அழைத்து வரும் ஊட்டி டாக்சி டிரைவர்கள், இங்கிருந்து மீண்டும் பயணிகளை அழைத்துக்கொண்டு ஊட்டி செல்கின்றனர். இது குறித்து நாங்கள் கேட்பதில்லை. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி., முன்னிலையில், குன்னூரில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, கலெக்டர் பவன்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை