உள்ளூர் செய்திகள்

நாடக கலையை மீட்கணும்

கோவை : கோவையில் கவிஞர் மருதுார் கோட்டீஸ்வரன் எழுதிய, 'வானொலி வசந்தங்கள்' என்ற நாடக நுால் வெளியீட்டு விழா, வைஷ்ணவா காம்பிளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது.ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் நுாலை வெளியிட, முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அருள் பெற்றுக்கொண்டார். நுால் குறித்து கவிதாசன் பேசியதாவது: சினிமா வருவதற்கு முன், மேடை நாடகங்கள்தான் மக்களின், முக்கிய பொழுது போக்காக இருந்தது. வானொலி நாடகங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் வளர்ச்சியால், நாடகம் என்ற வடிவம் நலிவடைந்து விட்டது. ஆனால் இந்த நுாலின் ஆசிரியர் கோட்டீஸ்வரன், தொடர்ச்சியாக நாடகங்களை எழுதி இயக்கி, நடித்தும் வருகிறார். இதுவரை, 600 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி இருக்கிறார்.அந்த நாடகங்களின் ஒரு பகுதிதான் இந்த நுால். அழிந்து வரும் நாடக கலையை மீட்க வேண்டும். அதற்கு கோட்டீஸ்வரன் போன்ற கலைஞர்களை, ஊக்கப்படுத்த வேண்டும். இவர் எழுதிய, எல்லா நாடகங்களையும் நுால் வடிவில் பதிப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினர்.கவிஞர்கள் உமாமகேஸ்வரி, கோவை கிருஷ்ணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ