மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
11 hour(s) ago
நாளைய மின்தடை
11 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
11 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
11 hour(s) ago
கோவை;கோவை அரசு கலை கல்லுாரியின் புவியியல் துறை சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு முதன்முறையாக கல்லுாரி மைதானத்தில் நடந்தது.இதில், 1963ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை படித்து வெளியேறிய, முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். கல்லுாரி காலங்களில் ஆடிப்பாடி மகிழ்ந்த நண்பர்களை காண, உற்சாகத்துடன் பலர் வந்திருந்தனர். முன்னாள் பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, இன்னிசை நிகழ்வு, வள்ளிக்கும்மி நடன நிகழ்வுகள் நடந்தன. ஆண்டுவாரியாக நண்பர்கள் குழுவாக இணைந்து, பழைய கதைகளை நினைவுபடுத்திக்கொண்டனர். 1960 முதல் 2010 வரை படித்த மாணவர்கள், ஆசை தீர 'செல்பி' எடுத்து நினைவுகளை சேகரித்து வைத்துக்கொண்டனர். சமீபத்தில் படித்து வெளியேறிய மாணவர்களுக்கு, பல்வேறு துறைகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்கினர். இதில், மேற்கு மண்டல ஐ.ஜி., புவனேஸ்வரி, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, முன்னாள் மாணவர்கள் குமாரசாமி, முத்துகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago