உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெல்மெட் அணியுங்க; சீட் பெல்ட் போடுங்க! போக்குவரத்து விதிமீறலால் ரூ.2.39 கோடி அபராதம் வசூல்

ஹெல்மெட் அணியுங்க; சீட் பெல்ட் போடுங்க! போக்குவரத்து விதிமீறலால் ரூ.2.39 கோடி அபராதம் வசூல்

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஒரு ஆண்டில், வரி மற்றும் வசூலிக்கப்பட்ட அபராத தொகையாக, 2 கோடியே, 39 லட்சத்து, 98 ஆயிரத்து, 670 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,' என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.போக்குவரத்து விதிமுறை மீறல், வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், குறிப்பிட்ட அளவை விட அதிகளவு கனிமவளங்கள், கேரளாவுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.கடந்த ஆண்டில், 2,726 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளன. வரியாக, 24 லட்சத்து, 96 ஆயிரத்து, 785 ரூபாயும்; அபராத தொகையாக, 2 கோடியே, 15 லட்சத்து, ஆயிரத்து, 885 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வரி மற்றும் அபராத தொகையாக, 2 கோடியே, 39 லட்சத்து, 98 ஆயிரத்து, 670 ரூபாய் வசூலிக்கப்பட்டது.கடந்த ஆண்டில், 467 விபத்துகள் நடந்துள்ளன. காயமடைந்தவர்கள், 488 பேர், உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை, 131 ஆகும்.

விழிப்புணர்வுடன் இருங்க!

வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:விபத்தில்லா பயணம் செய்ய அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 'ஹெல்மெட்' அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். கார்களை இயக்கும் போது, 'சீட் பெல்ட்' கட்டாயம் அணிய வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.மேலும், வாகன ஓட்டுனர்கள், அதிவேகமாக, அஜாக்கிரதையாக செல்வதை தவிர்த்தால் விபத்துகளை கட்டுப்படுத்த முடியும். உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்துபவர்களின் 'லைசென்ஸ்' தற்காலிக ரத்து செய்யலாம். எனவே, வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றுவதால், விபத்துகளை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ