உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வீரர்கள் சபாஷ்

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வீரர்கள் சபாஷ்

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், 100 வீரர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பள்ளி, கல்லுாரிகள், செஸ் அகாடமியை சேர்ந்தவர்கள் என, 310 பேர் பங்கேற்றனர். கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜி., துறை பேராசிரியர் நாகேந்திரன், உடற்கல்வி இயக்குனர் வேலுச்சாமி ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர்.இதில், 8, 10, 15, 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் பங்கேற்ற வீரர்களுக்கு, ஏ.பி.ஜே., விளையாட்டு அகாடமியினர் போட்டிகளை நடத்தினர்.ஒவ்வொரு பிரிவிலும் தலா, 20 பரிசுகள் உட்பட, 100 பேருக்கு, கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ் பரிசுகள் வழங்கினார். 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி