உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுத் திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா 

அறிவுத் திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா 

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அறிவு திருக்கோவிலில், வேதாத்திரி மகரிஷியின் துணைவியார் லோகாம்பாளின் பிறந்த நாளை, மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின், 111 வது ஜெயந்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, அறங்காவலர் பச்சையப்பன், வரவேற்றார். விஷன் அகடாமி இயக்குநர் பெருமாள், மனைவி நல வேட்பு உரையாற்றினர். விழாவில் பங்கேற்ற தம்பதியர், கணவன் மனைவிக்கு மலரையும், மனைவி கணவனுக்கு கனியையும் அளித்து, மலர் கனி பரிமாற்றம் செய்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் அருள்பிரகாஷ், 'மனைவியின் மாண்பு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, 'கணவன், மனைவியிடம் புரிதல், விட்டுக்கொடுத்தல் இருந்தால் மட்டுமே அன்பு நிலைக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து வாழப் பழகினால், கோபம் கொள்ளாமல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்,' என்று, தெரிவிக்கப்பட்டது. மேக் இந்தியா நிறுவன தலைவர் மாணிக்கம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, அறிவு திருக்கோயில் இணை நிர்வாகம் காவலர் சின்னசாமி, அறிவு திருக்கோயிலின் சிறப்பு அலுவலர் முருகானந்தம், செயல் அலுவலர் குமாரசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ