உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் உலா

 குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் உலா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, செல்லம்மாள் லே-அவுட் சாம்பமூர்த்தி நகர் குடியிருப்பு பகுதிகளில், காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி அடுத்த மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்படுகிறது. இவற்றின் இடம்பெயர்வை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர். சில பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் ஊடுருவல் இருப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி செல்லம்மாள் லே-அவுட், சாம்பமூர்த்தி நகர் குடியிருப்பு பகுதிகளில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. கூட்டமாக திரியும் காட்டுப்பன்றிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில், காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து தாக்க முற்பட்டால், அதனை விரட்ட அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு, வனத்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ