உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தடாகம் அருகே காட்டு யானை பலி

 தடாகம் அருகே காட்டு யானை பலி

பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் மலையடிவாரத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. துடியலூர் பிரிவு, தடாகம் வடக்கு சுற்று நாத்துக்காடு சரகத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் மலை அடிவாரத்தில் சுமார், 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. கோவை வனச்சரகர் திருமுருகன் சம்பவ இடத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அதில், உடல்நிலை சரியில்லாமல் யானை கீழே விழுந்து இறந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. காட்டு யானை இறப்புக்கான காரணம் கூராய்வு பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி