உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனவிலங்குகள் நடமாட்டம்; கவனமாக செல்ல அறிவுரை

 வனவிலங்குகள் நடமாட்டம்; கவனமாக செல்ல அறிவுரை

வால்பாறை: வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், வளைவுகளில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வால்பாறையில் பருவ மழைக்கு பின், வன வளம் பசுமையாக காணப்படுவதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்கிறது. வால்பாறை மலைப்பாதையில், சமீப காலமாக வனவிலங்குகள் வெளியில் வரத்துவங்கியுள்ளன. ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான ரோட்டில், பகல் நேரத்தில் வரையாடு, சிங்கவால்குரங்கு, காட்டுமாடு, யானை உள்ளிட்டவை உலா வருகின்றன. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை மலைப்பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, துண்டு சோலைகள் நிறைந்த பகுதியான சிறுகுன்றா, பழைய வால்பாறை, அய்யர்பாடி, உருளிக்கல், கருமலை, சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் வனவிலங்குகள் வெளியில் வரத்துவங்கியுள்ளன. இது போன்ற சூழலில், அந்த வழித்தடத்தில் வாகனங்களில் செல்லும் சுற்றுலாபயணியர், தங்கள் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், வேகத்தை வெகுவாக குறைக்க வேண்டும். வழியில் வனவிலங்குகள் தென்பட்டால் சிறிது நேரம் அமைதி காத்து, அவை வனப்பகுதிக்குள் சென்ற பின், உங்கள் பயணத்தை தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வன விலங்குகளை சுற்றுலாபயணியர் துன்புறுத்தவோ, அருகில் செல்லவோ கூடாது. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி