உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

கிணத்துக்கடவு; திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிேஷகத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான பக்தர்கள் செல்ல விருப்புவர். அதனால், கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் சிரமம் இல்லாமல் கோவிலுக்கு சென்று வரவும், கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.மேலும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16765) ரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால், பக்தர்கள் பயனடைவார்கள். எனவே, ரயில்வே நிர்வாகம் பயணியர் நலன் கருதி, இந்த ரயில் சேவையை துவங்க வேண்டுமென, கிணத்துக்கடவு பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை