உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

கோவை ; அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டத்துடன், கல்விக்கு இணையான செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் கடந்த, 2012ம் ஆண்டு தமிழகத்தில், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உடற்கல்வி, இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர் உட்பட எட்டு பாடங்களை இவர்கள் பயிற்றுவிக்கின்றனர்.மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில்(எஸ்.எஸ்.ஏ.,), துவக்கத்தில் ரூ.5,000 தொகுப்பூதியம் இவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2014ல் ரூ.2,000 சம்பள உயர்வு என, ரூ.7,000, 2017ல் ரூ.700 உயர்வு (ரூ.7,700), 2021ல் ரூ.2,300 உயர்வு என, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.ஆனால், சம்பளம் பெறுவதில் தாமதம், பல ஆண்டு பணி நிரந்தரமின்மை என பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கொந்தளிக்கின்றனர்.பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி பங்கிடப்பட்டு எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. போராட்டத்தின்போது ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்; அதுவும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. எங்களுக்கு முன் சேர்ந்த தற்காலிக ஆசிரியர்கள் எல்லாம் நிரந்தரம் செய்யப்பட்டனர். எனவே, 13 ஆண்டுகளாக போராடும் எங்களுக்கு தீர்வுதர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை