உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 8,789 எல்.இ.டி., விளக்குகள் விரைவில் பளிச்சிட தீவிரம்

8,789 எல்.இ.டி., விளக்குகள் விரைவில் பளிச்சிட தீவிரம்

கோவை;மாநகராட்சி பகுதிகளில் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில், 8,789 புதிய எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தும் பணிகளை, விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட சாஸ்திரி ரோட்டில் எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தும் பணியை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.பின்னர், அவர் கூறியதாவது:தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.34 கோடி மதிப்பீட்டில், 6,250 எண்ணிக்கையிலான புதிய எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது.மொத்தம் ரூ.20.24 கோடி மதிப்பீட்டில் 8,789 எண்ணிக்கையிலான எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடந்துவருகிறது. தற்போது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள சூழலில், இதர பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை