உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு

பஸ்சில் பெண்ணின் பர்ஸ் திருட்டு

கோவை; திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்தவர் மாரியம்மாள், 44. கடந்த, 3ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக, உக்கடம் வந்தார். அங்கிருந்து பஸ் வாயிலாக, தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயன்றார். தனது கைப்பையில் ரூ.27 ஆயிரம், மொபைல்போன் அடங்கிய மணிபர்ஸை வைத்திருந்தார். பஸ்ஸில் ஏறியதும் கைப்பையை சோதித்த போது, அதில் மணி பர்ஸ் மாயமாகி இருந்தது. இவரது புகாரின்படி, உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை