மேலும் செய்திகள்
கொடி கம்பங்களால் சாலையோரங்கள் சேதம்
2 minutes ago
காங்., 141வது ஸ்தாபன தினம்
7 minutes ago
வால்பாறை: சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை மீண்டும் நடமாடுவதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.,பங்களா. இந்த எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜாவெல்லி - ஷாஜிதாபேகம் ஆகியோரின் இளய மகன் சைபுல்ஆலம்,5, கடந்த 6ம் தேதி இரவு, 7:15 மணிக்கு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை கவ்விச்சென்று கொன்றது. இதனால் அய்யர்பாடி எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் பீதியில் உள்ளனர். இதனிடையே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியாசாஹூ உத்தரவின் பேரில், மனித - வன விலங்கு மோதலை தடுக்க, கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தை ஆய்வுக்குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். இதனிடையே ஆட்கொல்லி சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்டறிய, சம்பவம் நடந்த அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில், நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த எஸ்டேட் ரோட்டில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் ஆட்கொல்லி சிறுத்தை நடந்து செல்வது, அந்தப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் கூறுகையில், 'சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்காமல், கேமரா மட்டும் வைத்துவிட்டு கண்ணாமூச்சி காட்டி வருகின்றனர். மீண்டும் மனித உயிர்களை சிறுத்தை பலிவாங்குவதற்கு முன்னதாக வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க சம்பவ இடத்தில் கூண்டு வைக்க வேண்டும்' என்றனர்.
2 minutes ago
7 minutes ago