உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாரின் உடல் நலம் மேம்படுத்த யோகா பயிற்சி

போலீசாரின் உடல் நலம் மேம்படுத்த யோகா பயிற்சி

கோவை:கோவை மாநகர், மாவட்ட போலீஸ் சார்பில் போலீசாருக்கான ஆறு நாட்கள் யோகா பயிற்சி, பி.ஆர்.எஸ்., ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நேற்று துவங்கியது.பயிற்சியை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வரும் 7ம் தேதி வரை யோகா பயிற்சி நடக்கிறது. தினமும் காலை 6:45 முதல் 7:45 மணி வரை ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீசாருக்கான யோகா பயிற்சி, ஆறு நாட்கள் நடக்கும். யோகா வாயிலாக உடல், மன நலம் மற்றும் உணவு மேலாண்மை, ஆரோக்கிய வாழ்வியல் பெற உதவியாக இருக்கும்,'' என்றார்.மாநகர போலீஸ் துணை கமிஷனர் சண்முகம், ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் உட்பட, 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ