உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அக்டோபர் மாத மின்சார கட்டணமே செலுத்தலாம்

 அக்டோபர் மாத மின்சார கட்டணமே செலுத்தலாம்

கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் கோட்டம் சுந்தராபுரம் மற்றும் மதுக்கரை அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சுந்தராபுரம் அலுவலகத்துக்கு உட்பட்ட மாச்சம்பாளையம், அபிராமி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், லோட்டஸ் மில் காலனி மற்றும் எம்.எம்.கோவில், மதுக்கரை அலுவலகத்துக்கு உட்பட்ட குமிட்டிபதி, ஏ.ஜி.பதி, அம்பளபாறை, வழுக்கல், ரங்கசமுத்திரம், பட்டன்பாறை, கொம்மாண்டம்பாறை மற்றும் வேலந்தாவளம் பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், அக்டோபர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே டிசம்பர் மாதத்துக்கும் செலுத்தலாம் என, குனியமுத்துார் செயற்பொறியாளர் (பொறுப்பு) சென்ராம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி