இளம் விஞ்ஞானி ஆய்வு விருது
கோவை; பாரதியார் பல்கலை வேதியியல் துறை உதவி பேராசிரியர் கண்ணணுக்கு இளம் விஞ்ஞானிகள் ஆய்வு உதவித்தொகை விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இவ்விருதை வழங்கியுள்ளது. இவ்விருது வாயிலாக கிடைக்கும் உதவித்தொகை பயன்படுத்தி, ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., மைய இணைப்பேராசிரியர் கோபிநாத் புருஷோத்தமன் இருவரும் இணைந்து கரிம வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.