உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணவன் - மனைவியை தாக்கிய வாலிபருக்கு சிறை

கணவன் - மனைவியை தாக்கிய வாலிபருக்கு சிறை

கோவை: கோவை, பாரதி நகரை சேர்ந்தவர் காளிதாஸ், 43; ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், ராஜேந்திரனின் தம்பி மகனான சிவக்குமார், 24 ராஜேந்திரன் வேலை செய்யும் மீன் கடைக்கு அடிக்கடி வந்து, தகராறில் ஈடுபட்டு வந்தார். காளிதாஸ் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால் சிவக்குமார், காளிதாஸ் மீது ஆத்திரமடைந்தார். கடந்த 11ம் தேதி இரவு, காளிதாஸ் தனது மனைவியுடன், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவர்களை சிவக்குமார் வழிமறித்தார். தகாத வார்த்தைகளால் திட்டி இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி விட்டு, காளிதாசை தாக்கினார். அவரது மனைவி கண்டித்த போது, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து சென்றார். காளிதாஸ், பெரியகடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி