உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப் போட்டி தங்கம் வென்றார் விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப் போட்டி தங்கம் வென்றார் விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்

விருத்தாசலம் : மாற்று திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவரை முதல்வர் பாராட்டினார். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,19. மாற்று திறனாளியான இவர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரி விளையாட்டு அரங்கில் பயிற்சியாளர் அறிவழகன் உதவியுடன் தடகள பயிற்சி பெற்று வந்தார். கடந்த வாரம் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டாவது தேசிய தடகள போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவர் வேல்முருகன் ஈட்டி எறிதல் மற்றும் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் பெற்றார்.தேசிய அளவிலான போட்டியில் நான்கு பதக்கங்களை வென்ற மாற்று திறனாளி மாணவன் வேல்முருகனை கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், அரங்க பயிற்சியாளர் அறிவழகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை