உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை அணி முதல் பரிசு பெற்றது

மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை அணி முதல் பரிசு பெற்றது

கிள்ளை : பொன்னந்திட்டில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை சிவா பிரண்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. சிதம்பரம் அடுத்த பொன்னந்திட்டு கிராமத்தில் உள்ள லெனின் கைப்பந்து கழகம் சார்பில் 26ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்தது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன. போட்டியில் சென்னை சிவா பிரண்ட்ஸ் அணி, அண்ணாமலை பல்கலைக் கழகம், பொள்ளாச்சி பிரண்ட்ஸ் அணி, சென்னை பிரண்ட்ஸ் அணி, பொன்னந்திட்டு லெனின் அணிகள் முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு விளையாட்டு வீரர் மதிவாணன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் கிள்ளை ரவீந்திரன், பூராசாமி முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆர்.டி.ஓ., இந்துமதி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் காத்தவராயசாமி, வெங்கடேசன், முருகுமணி, அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுபிரிவு இணை கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வேலன், தனி அலுவலர் அருள்வேலன், சம்மந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி