உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறவழிசாலை விபத்தை தடுக்க வேகத்தடை அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் முடிவு

புறவழிசாலை விபத்தை தடுக்க வேகத்தடை அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் முடிவு

விருத்தாசலம் : விருத்தாசலம் புறவழிசாலை அருகே வேகத்தடை அமைப்பது குறித்து டி.எஸ்.பி., மற்றும் அதிகாரிகள் ஆலோசனை செய்தனைர். விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் சித்தலூர் அருகே புறவழி சாலை இணைகிறது. இந்த பகுதியில் வேகத்தடை, தடுப்பு கட்டைகள் இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.நேற்று காலை இந்த சாலையில் சென்ற இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. உயிர் சேதம் ஏதும் இல்லை என்றாலும், விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தலூர் பகுதி மக்கள் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொதுமக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர் டி.எஸ்.பி., அறிவழகன், தாசில்தார் சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தில்லைகோவிந்தன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் விபத்து தடுப்பது குறித்து ஆலோசனை செய்தனர். அப்போது விருத்தாசலம்- திட்டக்குடி சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கவும், புறவழி சாலையில் இரு இடங்களில் பேரிகார்டு அமைக்க முடிவு செய்தனர். உடனடியாக புறவழிசாலையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. விரைவில் வேகத்தடை அமைக்கப்படும் என்றனர். மேலும், புறவழிசாலை இணையும் இடத்தில் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ