உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அன்னாஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு : விருத்தாசலத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு

அன்னாஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு : விருத்தாசலத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு

விருத்தாசலம்: அன்னாஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.விருத்தாசலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. கிளை தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வள்ளுவன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் கலிவரதன் வரவேற்றார்.கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரியும், கருப்பு பணத்தை வெளிக் கொணரவும் அன்னாஹசாரே நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலம் கிளை சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே உண்ணாவிர போராட்டம் நடத்துவது என்றும், இப்போராட்டத்திற்கு பொது மக்களையும், இதர தொண்டு நிறுவனங்களையும் பங்கேற்க அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உறுப்பினர்கள் சண்முகம், அமரேசன், பாண்டியன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை