உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாய குடும்ப மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வலியுறுத்தல்

விவசாய குடும்ப மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வலியுறுத்தல்

சிதம்பரம்: கிராமப்புற விவசாய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் மணிவண்ணன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் தங்கள் பிள்ளைகளை சரிவர படிக்க வைக்க முடிவதில்லை. அவர்களின் துயரை நீக்கும் பொருட்டு தமிழக அரசு பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை விவசாய குடும்ப மாணவர்களை சேர்த்து இலவச கல்வி வழங்க வேண்டும். உயர் கல்வி சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ