உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோழியூர் கோவிலில் தீ மிதி உற்சவம்

கோழியூர் கோவிலில் தீ மிதி உற்சவம்

திட்டக்குடி : கோழியூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த வாரம் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 11ம் தேதி காலை சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி