உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமச்சீர் நிபுணர் குழு அறிக்கை எரிப்பு

சமச்சீர் நிபுணர் குழு அறிக்கை எரிப்பு

சிதம்பரம் : சிதம்பரத்தில் சமச்சீர் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல் படுத்தக்கூடாது என்ற சமச்சீர் நிபுணர் குழு உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததை கண்டித்தும், நிபுணர் குழு அறிக்கையை எரித்து ஆர்ப்பாட்டம் சிதம்பரம் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்தது. சிதம்பரம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய வக்கீல் செந்தில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், நடராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை