உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐஸ்வர்யா மகளிர் சங்க ஆலோசனைக் கூட்டம்

ஐஸ்வர்யா மகளிர் சங்க ஆலோசனைக் கூட்டம்

கடலூர் : கடலூர் ஐஸ்வர்யா மகளிர் சங்கத்தின் தலைமை பொறுப்பை கலெக்டர் அமுதவல்லி ஏற்றார். சங்க ஆலோசனைக் கூட்டத்தில் துணை தலைவர் லட்சுமி வரவேற்றார். செயலர் பிரேமலதா சங்க செயல் திட்டங்களையும், சாசன உறுப்பினர்கள் உமா, ஜெயந்தி, காந்திமதி ஆகியோர் பேசினர். பின்னர் சங்கத்தின் 25ம் ஆண்டு விழாவை கொண்டாடுவது மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கடலூரில் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து, பராமரித்து பசுமைப் புரட்சி ஏற்படுத்துவது குறித்து சங்கத் தலைவரான கலெக்டர் அமுதவல்லி ஆலோசனை கூறினார். பின்னர் சங்கத்தின் சார்பில் சேவை இல்ல மாணவர்களுக்கு இலவச நோட்டுகளும், இரண்டு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை