உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அகதிகள் முகாமில் ஆஸ்திரேலிய குழு ஆய்வு

அகதிகள் முகாமில் ஆஸ்திரேலிய குழு ஆய்வு

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவன குழுவினர் ஆய்வு செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குப்பங்குழி இலங்கை அகதிகள் முகாமில் 71 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இம்முகாமை ஆஸ்திரேலியா என்.சி.சி.ஏ., தொண்டு நிறுவன குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். கலந்துரையாடலில் தொண்டு நிறுவன தலைவர் ஹெலன் தலைமை தாங்கி பேசுகையில், கடந்த சுனாமியின் போது இப்பகுதியில் வந்து தங்கி மருத்துவ உதவிகள் செய்துள்ளோம். உங்களின் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ளவும், கல்வி, மருத்துவம் உதவிகள் குறித்தும் சேவை செய்யவும் விருப்பம் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் ஜான், வீஸ், ஹெலி, தாசில்தார் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை