உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை தேவை

நீர்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை தேவை

கடலுார்: கடலுாரில் சேதமடைந்துள்ள தண்ணீர் தொட்டியை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாநகராட்சி வில்வராயநத்தம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டியில் செடி, கொடிகள் படர்ந்து படிகட்டுகள் சேதமடைந்து, காணப்படுகிறது. இந்த படிகட்டுகள் மீது ஏறிச்சென்று தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த தண்ணீர் தொட்டி, படிகட்டுகளை சீரமைத்து பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை