உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் மோதி கூலி தொழிலாளி பலி

ரயில் மோதி கூலி தொழிலாளி பலி

பண்ருட்டி, : பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கிருஷ்ணராஜ்; 25; கூலி தொழிலாளி; இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்க ரயில் பாதை பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் ரத்தகாயங்களுடன் உயிரழிந்த நிலையில் கிடந்தார்.இது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் அடிபட்டு கிருஷ்ணராஜ் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ