உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாரம்பரிய சிலம்ப கலைக்கு மீண்டும் மவுசு

பாரம்பரிய சிலம்ப கலைக்கு மீண்டும் மவுசு

சிதம்பரம்: பாரம்பரிய விளையாட்டுகளுக்கு சமீப காலமாக மீண்டும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சிலம்பம், மல்லர்கம்பர் போன்ற போட்டிகளை மாநில அளவிலாக போட்டிகளாக நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, பாரம்பரிய கலையான, சிலம்பம் பயிற்சிக்கு '2 கே கிட்ஸ்' மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது சிலம்பம் பயிற்சிகள் பரவலாக வழங்கப்படுகிறது. இதில் சிறுவர்கள் மட்டுமின்றி சிறுமிகளும் ஆர்வத்துடன் சிலம்பம் பயிற்சியை கற்று வருகின்றனர். தற்போது, பள்ளிகளிலும் கூட, சிலம்ப பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அந்த வகையில், காட்டுமன்னார்கோவில் அடுத்த, நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜூவ்காந்தி தேசிய பள்ளியின் , தாளாளர் சுதா மணிரத்தினம் முயற்சியால், அப்பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம் பயிற்சி கற்று வருகின்றனர்.காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த பயிற்சியாளர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார். பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மீண்டும் மவுசு கூடி வருவதால்., இக்கால மாணவர்களும், சிலம்பம் பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி