உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 108 பால்குட ஊர்வலம்

108 பால்குட ஊர்வலம்

கடலுார், : கடலுார் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவையொட்டி, 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.கடலுார் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. அதையடுத்து, தினமும் சிறப்பு அபிேஷகம், அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 27ம் தேதி கரக உற்சவ ஊர்வலம், 28ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. நேற்று 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதனைதொடர்ந்து அம்மனுக்கு பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி