மேலும் செய்திகள்
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
23 minutes ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
3 hour(s) ago
பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை சித்திரைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திய போது, சென்னை மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சென்ற 'ஹூண்டாய்' காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த 2 பைகளில் தங்க நகைகள் இருந்தன. நகை தொடர்பாக எந்தவித ஆவணங்களும் இல்லாததால் வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரித்ததில்,மும்பையை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இயங்கி வரும் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தங்கம் எனவும், விற்பனை மாதிரிக்காக கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.அவர்கள் கொண்டு சென்ற தங்க நகை 12 கிலோ எனவும், அதன் மதிப்பு 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, தெரிகிறது. பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.
23 minutes ago
3 hour(s) ago